டெங்கு காய்ச்சல்- கோவையில் 7 பேர் சிகிச்சை…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது மழைக் காலங்களில் டெங்கு வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க சுகாதாரத் துறை என தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஏழு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

அவர்களுக்கு அதற்கான சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். மேலும் காய்ச்சல் காரணமாக சிலர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி விரும்புவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது; பருவமழை தொடங்கி உள்ளதால், நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், வீட்டின் அருகே கிடக்கும் தேவையில்லாத பொருட்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும், எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

டெங்கு கொசுவை அழிக்க தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும், ப்ளீச்சிங் பவுடர் தூவும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும், தண்ணீர் தொட்டிகளில் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் மருந்து ஊற்றும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும், தொடர் இருமல், சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் மரத்தை வெட்டியவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம்- பொதுமக்கள் வரவேற்பு…

கோவை: கோவையில் அனுமதியின்றி மரத்தை வெட்டிய நபர்களுக்கு 2.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பாராட்டுதலை பெற்று வருகிறது. கோவை மாநகர் வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த சங்கர்லால் என்பவர் அவரது சொந்த இடத்திற்கு...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...