ஓவியம் மற்றும் திரை அனுபவம்- கோவையில் நீண்ட நேரம் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சிவக்குமார்…

கோவை: கோவையில் நடிகர் சிவக்குமார் அவருடைய இரண்டு புத்தகங்கள் பற்றி வாசகர்களுடன் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement

கோவை அரசு மருத்துவமனை அருகில் உள்ள பொறியாளர் சங்க அலுவலகத்தில் நடிகர் சிவக்குமாரின் “PANTING OF SIVAKUMAR, GOLDEN MOMENT OF SIVAKUMAR IN TAMIL CINEMA” ஆகிய இரண்டு புத்தகங்களின் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு இரண்டு புத்தகங்களை பற்றி வாசகர்களிடம் உரையாடினார்.

அவர் வரைந்து புத்தகமாக்கிய Panting of Sivakumar என்ற புத்தகம் பற்றி பேசும்பொழுது அந்த ஓவியம் ஒவ்வொன்றை வரையும் பொழுதும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஜவஹர்லால் நேரு டாக்டர் ராதாகிருஷ்ணன் தந்தை பெரியார் காமராஜர் கலைஞர் கருணாநிதி என்எஸ் கலைவாணர் இயக்குனர் பாலச்சந்தர் நடிகர் நாகேஷ் இளையராஜா ஆகியோரின் ஓவியங்கள் பற்றியும் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட அவர் காமராஜர் மற்றும் என் எஸ் கலைவாணரின் ஓவியம் பற்றி பேசும் பொழுது சற்று கண் கலங்கினார்.

அதுமட்டுமின்றி திருப்பதி ஏழுமலையான் கோவில் திருவண்ணாமலை தஞ்சை பெரிய கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்றவற்றையும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர் வரைந்த ஓவியங்கள் பற்றியும் அத நான் அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதே போல் Golden Moment of Sivakumar in Tamil cinema என்ற புத்தகத்தில் அவரது திரைத்துறை வாழ்க்கை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து புத்தகங்கள் வாங்கிய அனைத்து வாசகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.