கோவை சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் நிர்மல்குமார் அளித்த உறுதி…

கோவை: நீதிமன்றங்களை விரிவு படுத்தும் வேலைகளை இந்த ஐந்து ஆண்டுகளில் செய்ய உள்ளோம் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதிமன்ற நீதி அரசர் மோகனா பங்கேற்றார் இவர் கோவை சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார். மேலும் முன்னால் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதி அரசர் பாரதிதாசனம் இதில் பங்கேற்றார்.

Advertisement

இந்த நிகழ்வில் உரையாற்றிய
சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) முன்னாள் நீதிபதி பாரதிதாசன், இங்கு பட்டம் பெறுபவர்களில் பெரும்பான்மையானவர்க்ள் பெண்கள் ஒரு காலத்தில் ஆண்கள் தான் அதிகம் இருந்தார்கள் என்றும் தற்பொழுது பெண்கள் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக ஒன்று தான் என்றார்.

நீதி துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரித்து உள்ளது என்றும் கீழமை நீதிமன்றங்களிலும் 40% பெண்கள் தான். புதிய Recoupment ல் பெண்கள் தான் அதிகம் வருவார்கள் போல என்றார். அதேசமயம் இன்னும் நிறைய நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி அறையில் இல்லை அவை எல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பணபற்றாக்குறை, குடும்ப சூழல், உரிய சம்பளம் இல்லாததால் இதில் பலரும் இருப்பதில்லை பெண் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் அது பெண்களுக்கான அடிப்படை உரிமை. ஆர்ட்டிகள் 21ல் அதனை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் என்றார்.

கட்சிக்காரர்கள் கடைசி நம்பிக்கையாக தான் வழக்கறிஞர்களிடம் வருகிறார்கள் என்றார். மேலும் கடின உழைப்பும் நேர்மையும் தான் உங்களை உயர்த்தும் என்றார்.

Advertisement

பின்னர் சிறப்புரையாற்றிய அமைச்சர் நிர்மல்குமார், உங்களுக்கெல்லாம் ரோல்மாடல் உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா அவர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

சமுதாயத்தில் மிக பெரிய அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் என்றும் மக்களை நினைத்து நீங்கள் பணியாற்றிட வேண்டும் ஏனென்றல் இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது அதிகம் பேசவில்லை அனைவருக்கும் வாழ்த்துகள், நீதிமன்றங்களை விரிவு படுத்தும் வேலைகளை இந்த ஐந்து ஆண்டுகளில் செய்ய உள்ளோம் என்றார்

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...