கோவை மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்…

கோவை: கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.241 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை
நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

Advertisement

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் பராஜ்குமார் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மண்டலம் வார்டு எண் 30க்கு உட்பட்ட கணபதி பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நுழைவு வாயில் மற்றும் அரங்க மேடை ஆகியவற்றிற்கான கட்டுமானப் பணிகளையும், மத்திய மண்டலம்வார்டு எண் 67க்கு உட்பட்ட செம்மொழிப் பூங்கா வளாகத்தில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.198 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் உள் வனமாதிரி காட்சியமைப்பு அமைக்கும் பணிகளையும், வார்டு எண் 83க்கு உட்பட்ட பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மாநகராட்சி பொதுக் கழிப்பிட கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம்வார்டு எண் 38க்கு உட்பட்ட ஐ.ஓ.பி காலனியில் உள்ள விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணி மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மத்திய மண்டலம் வார்டு எண் 63க்கு உட்பட்ட இராமநாதபுரம். 80 அடி சாலை பகுதியில் கழிவுநீர் குழாய் மேன்ஹோல்களில் ஏற்படும் அடைப்புகளான தேங்கியுள்ள சேறுவண்டல் மண் மற்றும் கழிவுகளை விரைவாகவும், எளிதாகவும் சுத்தம் செய்யும் வகையில் பயன்படுத்தக்கூடிய Manhole Desilting Machine இயந்திரத்தின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அலுவலர்களால்”கழிவுநீர் உறிஞ்சும் Manhole Desilting Machine இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதர்களை கழிவுநீர் கால்வாய்களில் இறக்கி சுத்தம் செய்யும் Manual Scavengingநடைமுறையை முற்றிலும் தவிர்க்கவும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நகரின் கழிவுநீர் வடிகால் அமைப்பை மேலும் திறம்பட பராமரிக்க இந்த இயந்திரமானது பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...