Breaking News: பள்ளியில் சாதிய பாகுபாடு? மாணவரின் முடிவால் வேதனை!

கோவை: கோவையில் பள்ளிக்குச் செல்வதில் மன உளைச்சலில் இருந்த 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு லால்பகதூர் காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி கௌசல்யாதேவி (41). அசோக்குமார் மூணாறில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சலவைத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

Advertisement

கௌசல்யாதேவி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இத்தம்பதிக்கு 19 வயதில் மகளும், அகிலன் (15) என்ற மகனும் உள்ளனர். மகள் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டும், அகிலன் கே.கே. நாயுடு பள்ளியில் 11-ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

அகிலன் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்ததாகவும், பள்ளியில் சாதியப் பாகுபாடு காரணமாக மாணவர்கள் தன்னிடம் பேசுவதில்லை எனத் தாயிடம் வருத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருந்த மாணவரை முறையான பயிற்சி வகுப்பில் சேர்த்துவிடுவதாக அவரது தாய் ஆறுதல் கூறி வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை காலையில் வழக்கம்போல் மாணவர் அகிலன் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது சகோதரி கல்லூரிக்கும், தாய் பணிக்கும் சென்றுவிட்டனர்.

பின்னர் மதியம் 1 மணியளவில் தாய் கௌசல்யாதேவி உணவருந்துவதற்காக வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, படுக்கையறையில் அகிலன் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு கதறி அழுதுள்ளார்.

Advertisement

உடனடியாக அவரை மீட்டு கீழே இறக்கிய நிலையில், விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மாணவர் அன்றைய தினம் பள்ளிக்குச் சென்றாரா என்பது குறித்தும், வகுப்பறையில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா என்பது குறித்தும் கௌசல்யாதேவி அளித்த புகாரின் பேரில், பீளமேடு (E-2) காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பீளமேட்டில் 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாதிய பாகுபாடு காரணமாக பள்ளி மாணவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற சம்பவம் கோவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...