கோவை காந்திபுரத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் இரும்பு சாரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பின்படி, தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை அறுவடை காலத்தில் கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் உணவு தேடி ஊருக்குள் வந்த மான் கூட்டம், கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே சாலையோர குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள கால்பந்து மைதானத்தை கார் பார்க்கிங்காக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியோர் கால்பந்து சங்கத்தினர் மனு அளித்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பீகார் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் இரு சக தொழிலாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பரதநாட்டியம் ஆடியபடியே 2 கி.மீ. மாரத்தானில் பங்கேற்று கவனம் ஈர்த்தனர்.