முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்- கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தல்…

கோவை: நீட் தேர்வு விலக்கு பெறும் வரை முதலமைச்சர் விஜய், உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவையில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனு கீர்த்தனா உடல் கோவைபுதூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலுக்கு கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், திமுக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு அஞ்சலி செலுத்தினார்..

இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்த அவர், இந்த மரணம் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது என்று தெரிவித்தார். நீட் என்பது தேர்வு முறையே கிடையாது என்று பத்து ஆண்டு காலமாக நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம், மாணவர்களின் வயது புரிதல் இல்லாமலேயே இந்த தேர்வு நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.

நீட் என்பது சந்தையின் சூழ்ச்சி வணிகத்தின் சூதாட்டம் என குறிபிட்ட அவர், நீட்டின் நோக்கம் தோல்வி அடைந்துள்ளதாகவும் அது வணிகத்தை கட்டுப்படுத்தவில்லை கோச்சிங் சென்டர் என்ற பெயரில் வணிக மயமாக்கப்பட்டு வருகிறது என்றார்.

நீட் தேர்வு மூலம் தகுதியானவர்களையும் கண்டறிய முடியவில்லை என்றும் வணிகமயம் ஆவதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.

நீட்டை திரும்ப பெறவில்லை என்றால் நரேந்திர மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் கூறினார்.

நீட் தேர்வில் மேலும் மேலும் குளறுபடிகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது என்ற அவர் நீட் தேர்வு வினாத்தாள்களை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்வது குறித்தான கேள்விக்கு வணிகத்தை எவ்வாறு பயன்படுத்த முடியுமோ நீட் தேர்வை அவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், உலகத்தில் எந்த நாட்டிலும் இளநிலை பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ராணுவத்தின் உதவிய யாரும் கேட்டதில்லை என்றார்.

இந்த சூழலில் அடுத்த கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துகிறோம் என்று கூறுகிறார்கள், எழுத்துமுறை தேர்வு நடத்தினால் விடைத்தாளில் தவறு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் யார் அதனை செய்தார் என்று தெரியும் ஆனால் ஆன்லைனில் தெரியாது, அதே போல் தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் முறை கேட்டில் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்திடாமல் காப்பாற்றுவதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்றும் தவறு செய்பவன் சட்டப்படி தவறு செய்வதற்காகத்தான் வழிவகை செய்கிறது மாணவர் நலன் சார்ந்து மருத்துவ நலன் சார்ந்து இல்லை என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் செல்வாக்கு பெற்றவரா என்று நிரூபிப்பதற்கு சரியான தருணம் இது என்றும் முதல்வருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பது உண்மை என்றால் எம்ஜிஆர் அரிசிக்காக தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்தியதை போன்று இவரும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அளவிற்காவது விலக்கு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கேட்க வேண்டும் இதற்கான மசோதாவையும் அனுப்ப வேண்டும்.


மசோதாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று சொல்லி உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு நடக்கும் பட்சத்தில் அவர் மக்கள் ஏற்றுக்கொண்ட பிரதிநிதியாக கருதலாம் இல்லையென்றால் அது வெறும் விசில் அடித்து செல்லும் ஏற்பாடாக தான் நாம் பார்க்க வேண்டும் என்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...