இன்டர்நெட் இல்லாமலே கேமரா கண்காணிப்பு; கோவையில் புதிய திட்டம்

கோவை: கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில், கேபிள் இணைப்பு மூலம் கேமரா காட்சிகளை கண்காணிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

கோவை மாநகரில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் மட்டும் சுமார் 350 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த கேமரா காட்சிகளை இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, கேபிள் இணைப்பு மூலம் நேரடியாக கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்காணிப்பு முறையை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

Advertisement

Read news:கோவையில் குப்பை கொட்டிய தகராறு; மூதாட்டி வெட்டிக்கொ*!

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்ற சம்பவங்களை விரைவாக கண்காணிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், மாநகரில் உள்ள முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் இடங்களில் உள்ள கேமராக்களையும் இதே முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Read news: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

இதன் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகள் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, குற்ற தடுப்பு மற்றும் குற்றவாளிகளை விரைவாக கண்டறியும் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.