கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு டார்க் நெட் மூலம் மிரட்டல்; ATS விசாரணை தொடக்கம்

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் சோதனை நடத்தி எதுவும் இல்லை என உறுதி செய்தனர்.

Advertisement

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது.

இதைதொடர்ந்து கோவை மாநகர போலீசின் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

கோவையில் ஜூனியர் ஹாக்கி போட்டி துவங்கியது…

Advertisement

தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலக அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்த குழுவினர் டார்க் நெட் என்ற வெப்சைட் பயன்படுத்துகின்றனர்.

Advertisement

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…

இந்த தளத்திலிருந்து மெயில் அனுப்பினால் பல நாடுகளில் இருந்து அனுப்புவது போன்ற ஐபி முகவரி இருக்கும். இதை யார் அனுப்பினார்கள் என கண்டறிய முடியாது. எனவே இதனை விசாரிக்க ‘ஆன்டி டெரரிசம் ஸ்குவார்ட்’ என்ற தீவிரவாத தடுப்பு குழு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த குழுவினர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர் குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர். கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி பாஸ்போர்ட், தபால் அலுவலகம் மற்றும் பல்வேறு அலுவலகங்களுக்கும் பலமுறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது.

கலெக்டர் அலுவலகத்திற்கு இன்றுடன் சேர்த்து 35 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...