இனி ஜிடி மேம்பாலத்தில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – ஸ்மார்ட் கண்காணிப்பு துவக்கம்

கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

Advertisement

உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில், வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் மேல்புறத்தில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும், ஏறும் மற்றும் இறங்கும் தளங்களில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திலும் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொடுத்த கடனை திருப்பி கேட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது தாக்குதல்

Advertisement

விதிமுறைகளை மீறி அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிய மொத்தம் 44 அதிநவீன ஏ.ஐ. (AI) கேமராக்கள் மற்றும் டிஸ்ப்ளே போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதிவேகம் மட்டுமல்லாமல், ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விதிமீறல்களை இந்தத் தொழில்நுட்பம் துல்லியமாகக் கண்டறியும்.

Advertisement

விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் எண்கள், உடனடியாக அங்குள்ள டிஸ்ப்ளே போர்டுகளில் காண்பிக்கப்படும். தற்போது ஒரு மாத காலத்திற்கு சோதனை முறையில் கேமராக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.’

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…

இதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், விரைவில் இவை போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனி ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை குற்றாலம் மூடப்பட்டது…

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான "கோவை குற்றாலம்" (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...