பள்ளி மாணவர்களுடன் கேரம் விளையாடிய கோவை கலெக்டர்!

கோவை: கோவையில் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு, அவர்களுடன் கேரம் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் மக்களைத் தேடிச்சென்று குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில், மேட்டுப்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் உங்களைத்தேடி உங்கள் ஊர் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு, மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். முன்னதாக உணவை வீணாக்காமல் சாப்பிடுவது குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து அப்பள்ளியில், வாங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாணவர்களுடன் கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளை சிறிது நேரம் விளையாடினார். மாவட்ட ஆட்சியருடன் அமர்ந்து விளையாடியது மாணவர்களை உற்சாகப்படுத்தியது.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சித்ரா பெளர்ணமி- கோவையில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி…

கோவை: கோவையில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிகரம் கலைக்குழுவினரின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே ஜங்கமனநாயக்கன்பாளையத்தில் சித்ரா பெளர்ணமியை ஒட்டி ராஜ கணபதி திருக்கோவிலில் சிகரம் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...