கோவையில் திடீர் சோகம்… வேலை செய்தபோது வாலிபர் பலி

கோவை: கோவையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் திடீரென மயங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சந்தோஷ் (29) என்பவர் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை போத்தனூர் கருப்பராயன் கோயில் அருகே உள்ள கிரீன் பார்க் பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பரிசோதித்த மருத்துவ உதவியாளர் சந்தோஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.