கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

கோவை: கோவை மாநகராட்சியில் நவம்பர் 21ம் தேதி மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

Advertisement

இதேபோல், வருகிற 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) சாதாரண மாமன்ற கூட்டம், டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்குகிறார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார்.

இதில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்த பல தீர்மானங்கள் அனுமதிக்காக முன் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Recent News

Video

Join WhatsApp