கோவையில் தனியார் நிறுவன ஊழியர்களிடம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

கோவை : கோவை மாவட்டத்தில் பகுதி நேர வேலை மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறியும், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் என்ற பெயரில் போலி லிங்க் அனுப்பியும், இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.9 லட்சத்துக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராமய்யா நகரைச் சேர்ந்தவர் 23 வயதான தனியார் நிறுவன ஊழியர். இவரது செல்போனுக்கு சமீபத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலை செய்து அதிக வருமானம் ஈட்டலாம் என்றும், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதில்களை அளித்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பிய அந்த இளைஞர், குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர், முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும்போது அதிக லாபம் வழங்கப்படும் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய இளைஞர், அந்த நபர் தெரிவித்த வங்கிக் கணக்கிற்குப் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.6 லட்சத்து 97 ஆயிரத்து 367-ஐ அனுப்பியுள்ளார்.

Advertisement

ஆனால், பணத்தை முதலீடு செய்த பின்னரும் அவருக்கு எந்தவித லாபத்தொகையும் வழங்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். அப்போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்தே தான் மோசடி செய்யப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

போக்குவரத்து அபராதம் பெயரில் மற்றொரு மோசடி

இதேபோல், கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த 54 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அந்தச் செய்தியில் அபராத விவரங்களைப் பார்ப்பதற்காக இணையதள லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இதனை உண்மையான போக்குவரத்துத் துறை அறிவிப்பு என நம்பிய அவர், அந்த லிங்க்கை கிளிக் செய்து பார்த்துள்ளார்.

அப்போது மர்ம நபர்கள் அவரது செல்போனை ஹேக் செய்து, வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்தை எடுத்துள்ளனர். வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் ரூ.9 லட்சத்து 4 ஆயிரத்து 367 மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் தனித்தனியாகப் புகார் அளித்தனர்.

புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...