கோவையில் குடிநீர் நிறுத்தம் மக்கள் அவதி!

கோவை: குந்தா அணை பராமரிப்பு காரணமாக பில்லூர் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisement

மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் இருந்து பில்லூர் குடிநீர் திட்டத்தின் கீழ், தண்ணீர் எடுக்கப்பட்டு, திட்டமிடப்பட்ட இடைவெளியில் நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் குந்தா அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் பில்லூர் திட்டம் 2, பில்லூர் திட்டம் 3 மற்றும் கவுண்டம்பாளையம்-வடவள்ளி-வீரகேரளம் திட்டம் போன்ற கூட்டு நீர் வழங்கல் திட்டத்தின் கீழ்குடிநீர் வழங்கல் தடைபட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வரவில்லை என்பதால், பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் இருந்து வருகிறது. பராமரிப்பு பணி காரணமாக பெரும்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையைப் போக்க இடைவிடாத நீர் விநியோகத்தை வழங்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலியுறுத்தியுள்ளோம்.

Advertisement

அதே நேரத்தில், பிற ஆதாரங்களைப் பயன்படுத்தியும் தண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். மேலும் பராமரிப்பு பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...