கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதல்! இருவர் உயிர் தப்பினர்

கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தின் கோல்டுவின்ஸ் பகுதியில் நேற்று லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், காரில் பயணித்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோவையின் முக்கியப் போக்குவரத்து வழித்தடமான அவிநாசி சாலையில், ஜி.டி. நாயுடு மேம்பாலத்தின் கோல்டுவின்ஸ் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி மீது கார் பலமாக மோதியது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே, கோல்டுவின்ஸ் பகுதியில் வாகனங்கள் செல்லத் தடை உள்ள குறுகிய பாதைகளில் நுழைவதும், போக்குவரத்து விதிகளை மீறி எதிர்த்திசையில் வாகனங்களை இயக்குவதும் விபத்து அபாயத்தை அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எதிரே வாகனங்கள் வந்து கொண்டிருக்கும்போதே அவசரமாக முந்திச் செல்ல முயல்வது, அந்த வழியாகப் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

குறிப்பாக, மேம்பாலத்திலும் அதன் இறங்குதளங்களிலும் சிலர் வேகத்தைக் குறைக்காமல் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் தொடர்ந்து நிகழ்வதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...