வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக விரைந்து முடித்திட வேண்டும்- கோவை மேயர் அறிவுறுத்தல்…

கோவை: கோவையில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடித்திட அறிவுறுத்திய கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் , நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சியில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய வடக்கு மண்டலம் வார்டு எண்.29-க்குட்பட்ட கணபதி நகர் பகுதியில் மாநகராட்சியின் பொது நிதியின்கீழ் ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்ப கட்டுதல் பணியினை மேயர் துவக்கி வைத்தார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டலம் வார்டு எண்.29-க்குட்பட்ட வி.என்.எஸ். நகர் பகுதியில் மாநகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்கா கட்டுமானப் பணியினையும், அதே வார்டு மருதையா நகள் பகுதியில் மாநகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்கா கட்டுமானப் பணியினையும் மற்றும் கணபதி காந்திநகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுமானப் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும். தரமாகவும் செய்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நாளை ஆடி அமாவாசை… மறந்தும் கூட வீட்டில் இந்த 15 விஷயங்களை செய்யாதீர்கள்…!

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களை வழிபடும் முறைகள், தர்ப்பணம் செய்யும் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியமாக வீட்டில் தவிர்க்கப்படும் 15 விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.