கோவையில் முடிவுற்ற பணிகளையும், புதிய பணிகளையும் துவக்கி வைத்த எம்பி…

கோவை: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மாநகராட்சி, வடக்கு மற்றும் மத்தியம் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற 6 பணிகளை திறந்து வைத்து 3 புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.39 கோடி மதிப்பீட்டில் முடிவற்ற 6 எண்ணிக்கையிலான பணிகளை திறந்து வைத்தும் மற்றும் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் 3 எண்ணிக்கையிலான புதிய திட்டப் பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

அதன்படி கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண். 14 க்குட்பட்ட வெள்ளக்கிணறு, உழைப்பாளர் வீதியில் தூய்மை இந்தியா (2.0) (ஸ்வச் பாரத் மிஷன்-SBM) திட்டத்தின்கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடத்தையும் மற்றும் மீனாட்சி நகர், அமர்ஜோதி நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டில் ராஜவாய்க்காலின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம்

வார்டு எண்.4-க்குட்பட்ட சரவணம்பட்டி விஸ்வாசபுரம் விமல் ஜோதி பள்ளி அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையினையும் மற்றும் வார்டு எண்.26க்குட்பட்ட பீளமேடு, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.83.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள (ARVR LAB) ஆய்வகத்தினையும் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண்.67-க்குட்பட்ட இரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.83.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட (ARVR Lab) ஆய்வகக் கட்டிடத்தினையும் மற்றும் வார்டு எண்.63-க்குட்பட்ட இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.83.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட (ARVR Lab) ஆய்வகக் கட்டிடத்தினையும் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

Advertisement

முன்னதாக, மத்திய மண்டலம், வார்டு எண்.48-க்குட்பட்ட ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் பொதுநிதியிலிருந்து ரூ.29.50 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் கால்வாயின் நடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை மாண்புமிகு மேயர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர், அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா வளாகத்தில், ரூ.95.00 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்படவுள்ள நீச்சல் குளத்திற்கு அடிப்படை கட்டுமானப் பணிகளான கழிப்பிடம், நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ரூ.98.00 இலட்சம் மதிப்பீட்டில், நீச்சல் குளத்திற்கு நடைபாதை, வாகன நிறுத்தம் அமைக்க சாலை மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

ஆட்டோ பாகங்களை ஆட்டோவில் வந்து திருடிய கும்பல்- கோவையில் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…

கோவை சிவானந்தா காலனியில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Join WhatsApp