இலங்கை குடும்பம் தவறவிட்ட தங்க நகை மீட்பு; உரியவரிடம் ஒப்படைத்த கோவை போலீசார்!

கோவை: இலங்கையில் இருந்து கோவைக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் தவறவிட்ட தங்க நகையை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

இலங்கையைச் சேர்ந்த விமலேந்திரன் (27), கடந்த 16-ம் தேதி குடும்பத்தினருடன் கோவைக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது பேரூர் மெயின் ரோட்டில் உள்ள பேக்கரிக்கு குடும்பத்தினருடன் சென்று டீ குடித்துள்ளார்.

அப்போது அவரது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 1½ பவுன் தங்க நகை காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த விமலேந்திரன், செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Also Read: குலைநடுங்க வைக்கும் கோவை: இந்த மாதத்தில் 7 கொலைகள்… இன்று மட்டும் 3…!

Advertisement

இதையடுத்து போலீசார் பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தை தவறவிட்ட நகையை அங்கிருந்த வாலிபர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், நகையை எடுத்துச் சென்றவர் கரூரைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிந்து, அவரிடம் இருந்து தங்க நகையை மீட்டனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட நகையை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், விமலேந்திரனை நேரில் வரவழைத்து ஒப்படைத்தார்.

Also Read: சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் திருட்டு கும்பல் அட்டகாசம்? வைரலாகும் VIDEO!

தவறவிட்ட தங்க நகையை விரைவாக மீட்டு ஒப்படைத்த கோவை மாநகர போலீசாருக்கு இலங்கை குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...