கோவை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
இதனிடையே, கோவையில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜூன் 2 அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜூன் 3) நாளையும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4 முதல் 7ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்களது பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.


