கோவை: மத்திய அரசு தமிழ்நாட்டில் 11% இறக்குமதி வரியில் இருந்து பருத்திக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளதற்கு தென்னிந்திய பஞ்சாலை சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கோவையில் தென்னிந்திய பஞ்சாலை சங்கம்(SIMA) நிர்வாகிகளான SIMA தலைவர் துரை பழனிச்சாமி, பொதுச் செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், மாநகர தலைவர் அஸ்வின் சந்திரன், டெக்ஸ் ப்ரோசில் துணைத் தலைவர் ரவி ஷாம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினர். இந்தத் துறை தற்பொழுது நன்கு வளர்ச்சி அடைந்த வருவதாகவும் பல்வேறு நாட்டிற்கு இடையே ஆன ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருவதாகவும் இது போன்ற ஒப்பந்தங்கள் இந்த துறைக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
முதல்வர் ஜோசப் விஜய்யும் உதவியாக இருந்ததாகவும் அவர் பொறுப்பேற்ற உடனே இது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்த அவர்கள் அவரது கோரிக்கையை அடுத்த சில நாட்களிலேயே மத்திய அரசு இந்த வரியில் விலக்கு அளித்ததாகவும் குறிப்பிட்டனர். இந்த நேரத்தில் முதல்வருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும் இந்த வரி விலக்கு நவம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்றும் தெரிவித்தனர். இந்த வரி விலக்கு என்பது நிலையான போட்டி திறனை கொண்டு வந்து விரைவில் அமலாக உள்ள பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இதர வரியில்லாத ஒப்பதஙகளின் பயனை அடைய உதவும் என்றனர். காட்டன் துறையில் பற்றாக்குறை இருப்பதாகவும் பல்வேறு நாட்டின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வேலைகள் அதிகரிக்கும் பொழுதும் ஏற்றுமதி அதிகரிக்கும் பொழுதும் அவற்றை சரி செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த வரி விலக்கை ஏப்ரல் மாதமே எதிர்பார்த்ததாகவும் அப்பொழுது வந்திருந்தால் Industrial Planing க்கு சரியாக இருந்திருக்கும் என குறிபிட்டனர். தரமான பருத்திகள் எடுப்பதற்கு சில மருந்துகள் வாங்க வேண்டும் ஆனால் அதற்கான உரிமைம் கிடைப்பதற்கே 2030ம் ஆண்டு ஆகிவிடும் என்று கூறுகிறார்கள் என்றார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்த துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் மூலப் பொருட்களின் விலை 25 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் ஏற்றுமதி செலவுகளும் கூடியிருப்பதாகவும் தெரிவித்தனர். முதல்வர் விஜயை நாங்கள் சந்திக்கும்போது ஆண்டிற்கு 6.5% மின் கட்டணத்தை உயர்த்து மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அது குறித்து பரிசீலனை செய்யுமாறு நான் தாங்கள் கோரிக்கை விடுத்ததாகவும் உடனடியாக அதற்கான அலுவலரை அழைத்து முதல்வர் விஜய் பரிசீலிக்கும் படி தெரிவித்ததாக கூறினர்.
முதல்வர் விஜயால் மட்டும் இது சாத்தியமானது என்று கூறிவிட முடியாது அனைவரும் இது குறித்து கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து தான் வந்தார்கள் முதல்வரின் கோரிக்கையை முதன்மையாக எடுத்துக் கொண்டு மத்திய அரசு இதனை செய்துள்ளது என்று தெரிவித்தனர். நூல் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் அதுவும் இந்த துறையை பாதித்ததாகவும் ஆனால் தற்போது இந்த இறக்குமதி வரி விலக்கு அறிவித்ததை தொடர்ந்து நூல் விலையும் தற்பொழுது சீராகி உள்ளது என்று தெரிவித்தனர்.
பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் நமது போட்டி நாடுகளான பங்களாதேஷ் வியட்நாம் பாகிஸ்தான் இந்தோனேசியா துருக்கி போன்ற நாடுகளில் இறக்குமதி வரி இல்லாத காரணத்தினால் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய இறக்குமதி வாய்ப்பு தடைப்படுவதாகவும் இதனால் வேலை வாய்ப்பு ஏற்படுவதாகவும் ஆனால் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக வரி விளக்கு இந்த சூழ்நிலையை தவிர்த்து உள்ளது என்று தெரிவித்தனர்.



South India manchester… Coimbatore ye mudichi katna sangam thana…import tax koranja. Ella moolayum therandhudiveengala