கோவை: கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதாக நேற்று டெல்லியில் நித்தின் நபின், அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து கடிதம் வழங்கி விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.
அதே சமயம் நாளை ஜூன் 4ம் தேதி அவரது பிறந்த நாள் அன்று புதிய கட்சி துவங்க இருப்பதாகவும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பலரும் தெரிவித்து வரும் சூழலில் பல்வேறு மாவட்டங்களில் அதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் சமூக வலைதளங்களிலும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திலும் முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைவா தரணி ஆள வா என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி இருந்தார். அதேசமயம் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலைக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் ரஜினியின் ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?
இந்நிலையில் கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அண்ணாமலையின் புகைப்படங்களுடன் “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் உக்கடம் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


