கோவையில் அதிகாலை முதலே மழை…

கோவை: கோவை மாநகரில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

கோவையில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இன்றைய தினம் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலில் மிதமான மழையும் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

கோவை மாநகரில் காந்திபுரம் ராமநாதபுரம் புலியகுளம் உக்கடம் ஆத்துப்பாலம் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் புறநகர் பகுதிகளான கவுண்டம்பாளையம் துடியலூர் ஜி என் மில் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

Advertisement

அதே சமயம் மாவட்ட எல்லை பகுதிகளான கணுவாய் தடாகம் மாங்கரை பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் ரெயின் கோட் அணிந்த வண்ணம் பயணம் மேற்கொள்கின்றனர் நடந்து செல்லும் பொதுமக்கள் பலரும் குடைகளை பிடித்த வண்ணம் நடந்து செல்கின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.