கோவை சிங்காநல்லூரில் முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை : கோவை சிங்காநல்லூரில் முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை சிங்காநல்லூரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் லஞ்சம் பெற்றதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாகவும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இன்று காலை 6 மணியளவில் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் சோதனையை தொடங்கினர்.

Advertisement

சென்னை அடையாறு, திருவான்மியூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள், கோவை உள்ளிட்ட இடங்களில் முதற்கட்டமாக 10 இடங்களில் சோதனை தொடங்கியது. தொடர்ந்து இந்த சோதனை மாநிலம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை திருச்சி சாலை, சிங்காநல்லூர் அருகே உள்ள பிரபல டி.வி.எச். அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள கே.என்.ரவிச்சந்திரனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பத்துக்கும் மேற்பட்ட போலீசார் குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தியுள்ள இந்த திடீர் சோதனையால் கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...