மேற்கு புறவழிச்சாலையில் பைக் வீலிங்… கல்லூரி மாணவர்களுக்கு TC? பேரூர் போலீஸ் நடவடிக்கை

கோவை: கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு புறவழிச்சாலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் வீலிங் மற்றும் அதிவேக சாகசங்களில் ஈடுபட்டதாக 4 கல்லூரி மாணவர்களை பேரூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

மேற்கு புறவழிச்சாலையில் சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேரூர் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வீலிங்கில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடிய 3 இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில் வாகன உரிமையாளர்களின் முகவரிகளை கண்டறிந்து, தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட 4 பேரும் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் படிக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அறிக்கை சமர்ப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு புறவழிச்சாலையில் தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் வீலிங் மற்றும் அதிவேக ரேஸிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரூர் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement

மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...