காதல் தோல்வி… மன உளைச்சல்: கோவையில் 18 வயது கல்லூரி மாணவர் விபரீத முடிவு

கோவை: ஒருதலைக் காதல் தோல்வி மற்றும் குடும்பச் சூழல் காரணமாக மன உளைச்சலில் இருந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார். திண்டுக்கல்லில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவரது மனைவி காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் பிரணவ் பத்மாதேவ் (18).

பிரணவ் பத்மாதேவ் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகே இ.பி. காலனி, புதிய நகரில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்து, அவரது தந்தை மற்றும் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவலறிந்து கோவை வந்த அவரது தந்தை, மகனின் உடலைக் கண்டு கதறி அழுதார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரணவ் பத்மாதேவ் மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், அந்தக் காதல் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சில குடும்பப் பிரச்னைகள் காரணமாகவும் அவர் கவலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதற்கிடையே, அவர் தங்கியிருந்த அறையில் இருந்து உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

18 வயது கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் விற்பனை ஏன்?- விளக்கமளித்த அமைச்சர் விக்னேஷ்…

மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலை குறைக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் ஆன்லைன் ஆர்டர் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.