அமைச்சர் சரத்குமாருக்கு கண்டனம்- கோவை எம்பி, மாநகராட்சி மேயர் கைது…

கோவை: அமைச்சர் சரத்குமாரை பதிவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடனடியாக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்து போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே சமயம் அனுமதியின்றி திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதால் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டனப் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி மேயர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...