சுல்தான்பேட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

கோவை: சுல்தான்பேட்டை ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் மநேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இந்த ஆய்வின்போது சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கலாராணி உதவிப்பொறியாளர்கள் கனகராஜ், அருண், சூலூர் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு வழங்கப்படும் நலத்திட்டங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் சென்றடைவதையும். மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாகவும்உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலாவதாக சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம்வாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சந்தராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ள மருந்து மாத்திரை இருப்புகள் குறித்தும், அங்குள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியிலுள்ள சத்துணவு மையத்தினையும் பார்வையிட்டு உணவு பொருட்களின் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனையடுத்து, வாரப்பட்டி ஊராட்சி குளத்துப்பாளையம் பொது விநியோகக் கடையினை நேரில் பார்வையிட்டு, அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் குறித்துபொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தினை நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடியிலுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் குழந்தைகளின் வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இறுதியாக வாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டடட கட்டுமாணப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வதம்பச்சேரி ஊராட்சிக்குட்பட்பட்ட வடுகபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொது விநியோகக் கடையினையும். இ-சேவை மையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...