கோவை எஸ்பி அலுவலகத்திற்கு சட்ட ஆலோசகர் தேவை- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சட்ட ஆலோசகருக்கான பணி நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள வழக்கறிஞர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Advertisement

பணி நியமனம் செய்யப்படும் சட்ட ஆலோசகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வேண்டும். நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர் காவல் துறையின் நலன்களுக்கு எதிரான வழக்குகளை எடுத்துக்கொள்ளக் கூடாது

மாத ஊதியமாக ரூ.20,000/- வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள வழக்கறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24.07.2026-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சட்ட படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், மாவட்ட நீதிமன்றங்களிலோ, உயர் நீதிமன்றங்களிலோ குறைந்த பட்சம் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் மற்றும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்படாத நபராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...