கோவை மாநகராட்சி பகுதியில் போஸ்டர் ஒட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அபராதம்- புதிய ஆணையர் அதிரடி…

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் போஸ்டர் ஒட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் அபராதம் விதித்தார்.

Advertisement

கோவை மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதிய மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையாளராக கட்டா ரவி தேஜா புதிதாக பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்றதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட போத்தனூர் ரயில் நிலையம் அருகில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்துள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில் அனுமதி இன்றி போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.

Advertisement

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ துவக்கிய ஜனநாயகன் பாஸ்போர்ட்…

ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, "ஜனநாயகன் பாஸ்போர்ட்" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பொறுப்புள்ள குடிமகனாக செயல்பட உறுதிமொழி எடுக்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...