டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்; கோவையில் மாணவர்கள் கைது- video

கோவை: டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவையில் DYFI, SFI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர்..

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி DYFI மற்றும் SFI அமைப்பினர் திடீர் கண்டன ஊர்வலமாக சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள BSNL அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also read: கோவையில் இளம் ஜோடிகளின் லீலைகளைப் பார்க்க மறைந்திருந்தவர் சிக்கினார்!

Advertisement

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்ட அமைப்பினர், கடந்த ஜூன் 20 முதல் ஒன்றிய கல்வி அமைச்சரின் இல்லம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக் உள்ளிட்ட மாணவர்களை டெல்லி போலீசார் தாக்கி கைது செய்ததாக குற்றம்சாட்டினர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்த டெல்லி போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Advertisement

மருத்துவக் காவலில் இருப்பதாகக் கூறப்படும் சோனம் வாங்சுக் உள்ளிட்ட மாணவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

Also Read: இப்போ பாட்டிலுக்கு 5 ரூவா… கோவையில் அமைச்சர் விக்னேஷ் பதில்!

மேலும், “இந்தியாவின் கல்வி மற்றும் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்று தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட DYFI மற்றும் SFI அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்து போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தவெகவிற்கு ஆதரவு ஏன்? வெளிப்படையாக பேசிய எஸ்.பி.வேலுமணி…

கோவை: திமுக எதிர்ப்பு என்பதால் தான் தவெகவிற்கு ஆதரவளித்தோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.