லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை

கோவை: லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகனம், 2009 அக்டோபரில் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறுமுகத்தை ஜாமீனில் விடுவித்து, அவரது இருசக்கர வாகனத்தை மோட்டார் வாகன ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது மணப்பாறை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ராஜாத்தி, வாகனம் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ஆறுமுகம், 2009 அக்டோபர் 29-ஆம் தேதி திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவரிடம் வழங்கி, மறுநாள் மணப்பாறை காவல் நிலையத்திற்கு அனுப்பினர்.

Advertisement

திட்டமிட்டபடி ஆறுமுகம் லஞ்சத் தொகையை ராஜாத்தியிடம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரைக் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி புவியரசு தீர்ப்பளித்து, முன்னாள் எஸ்.ஐ. ராஜாத்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தார். இந்த தீர்ப்பு 2009-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நண்பரை கடத்தி பணம் பறிக்க முயற்சி; 5 பேருக்கு குண்டர் தடுப்புச் சட்டம்

டீக்கடை உரிமையாளரை கடத்தி ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 5 ரவுடிகள் மீது கோவை மாநகர போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...