“மக்களே நமது முதலாளி; நாம் அவர்களின் பணியாளர்கள்” – சுதந்திர தினத்தில் MLA கனிமொழி சந்தோஷ்

கோவை: நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய MLA கனிமொழி சந்தோஷ், தொகுதி மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய அவர், பல கோடி தியாகிகளின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாகவே நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகிறோம் என குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் அகிம்சை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரம், பகத் சிங்கின் துணிச்சல் உள்ளிட்ட தலைவர்களின் போராட்டங்களை இந்நாளில் நினைவுகூர வேண்டும் என்றார்.

மேலும், தமிழகத்தில் இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், திருப்பூர் குமரன் உள்ளிட்ட தியாகிகளையும் போற்றி வணங்க வேண்டும் என தெரிவித்தார்.

“தியாகிகள் நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். அந்த சுதந்திரத்தை பாதுகாத்து, நாட்டையும் சமூகத்தையும் முன்னேற்றுவது ஒவ்வொருவரின் பொறுப்பு” என அவர் கூறினார்.

Advertisement

கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் பிரதிநிதியாக, சாதி, மதம், கட்சி என எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து மக்களின் குறைகளையும் கேட்டு, அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதே தனது முக்கியக் கடமை என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்கள், உழைப்பாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பதுடன், அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் முறையாக சென்றடைவதை உறுதி செய்வோம் எனவும் அவர் கூறினார்.

Advertisement

“மக்களே நமது முதலாளி; நாம் அவர்களின் பணியாளர்கள்” என்ற எண்ணத்துடன் மக்கள் சேவையை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தினார்.

கவுண்டம்பாளையம் தொகுதியை தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தமிழ் உணர்வுடனும் தேசப்பற்றுடனும் மக்கள் நலனை முன்னிறுத்தி தொடர்ந்து பயணிப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.

“வாழ்க பாரதம்! வளர்க தமிழ்நாடு! ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்!” என கனிமொழி சந்தோஷ் வாழ்த்து தெரிவித்தார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் கலை கட்டிய சுதந்திர தின விழா

கோவை: கோவையில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் என சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் 80வது...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...