கோவை மக்களே தீபாவளி பரிசு காத்திருக்கிறது!

கோவை: தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தீபாவளி மற்றும் முந்தைய நாட்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 18ம் தேதி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 19ம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி நாளில், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த செய்தியை கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு ஷேர் செய்திடுங்கள் வாசகர்களே

Recent News

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp