கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 11ஆம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.
இதனால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற 11ஆம் தேதி (திங்கட்கிழமை) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கோவை மாவட்ட கலெக்டர் Pawan Kumar தெரிவித்துள்ளார்.


