தார்மீக பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்- அமைச்சர் சம்பத்…

கோவை: நேரு, அம்பேத்கர், பெரியார் பெயர்கள் விடுபட்டதற்கு தார்மீக பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி(தனியார்) கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
சம்பத்குமார் தலைமையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் துறையின் சார்பில்,
வீட்டு வசதி வாரிய பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சம்பத்குமார் தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம் என்றார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீட்டில் இருந்தாலும் பட்டா இல்லாமல் யாராவது ஒரு எடுத்து கொள்வார்களா? என்று இருந்தீர்கள் நம் அரசு பொறுப்பேற்றவுடன் கோவையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பட்டா தொடர்பாக விண்ணபித்துள்ளார்கள், என்றும் அவர்களுக்கு படிபடியாக வழங்கப்படும் என்றார். 30,40 வருடம் இதற்காக போராடி வந்த நிலையில் முதல்வரின் இந்த செயல்த்திட்டத்திற்கு முதல்வர், அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்குமார் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த் அமைச்சர் 30, 40 வருடங்களாக வீட்டு மனை பட்டா பெறாமல் போராடி வந்த மக்களுக்கு அவர்களது பகுதிக்கு சென்று பட்டா வழங்கும் பணிகள் தற்போது துவங்கி உள்ளது என்றும் , முதல் கட்டமாக 500 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படுகிறது என்றார்.

பெரியார் அறிவுலகம் திறப்பு குறித்தான கேள்விக்கு அங்கு உட்புற பணிகள் நடைபெற்று வருவதாகவும் பணிகள் 100% நிறைவடைந்த பிறகு முதல்வரால் அது திறந்து வைக்கப்படும் என்றார்.

Advertisement

பிற்படுத்தப்பட்டோர் மாநில கோரிக்கை கொள்கை குறிப்பில் அம்பேத்கர் பெரியார் நேரு பெயர்கள் விடுபட்டதற்கு விசிக கண்டனம் எழுப்பியுள்ளது குறித்தான கேள்விக்கு தந்தை பெரியார் அம்பேத்கர் தமிழக வெற்றி கழக கொள்கை தலைவர்கள் அவர்களுடைய வழிகாட்டுதலில் தான் எங்களுடைய செயல்பாடுகள் உள்ளது என்ற அவர் பெயர்கள் விடுபட்டதற்கு தார்மீக பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றும் அது குறித்து மறுப்பிரசுரம் வழங்கக்கூடிய பணிகள் நடந்து கொண்டிருக்கிறது வரலாற்றில் மக்களுக்காக உழைத்த தலைவர்களை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம் என்றார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் முதல்முறையாக பங்கேற்றவர்கள் தான்
மக்களுக்காக தான் சென்றுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், மக்கள் எங்களுக்கு கொடுத்த பிரதிநிதித்துவத்தை என்றென்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்.

சட்டமன்றத்தில் எம்ஜிஆர் பாடல் பாடியது குறித்தான கேள்விக்கு ரீல்ஸ் ரீல்ஸ் என்று கூறுகிறார்கள் அந்த ரீல்ஸை முதலில் ஆரம்பித்தது யார் என்று 1970 காலகட்டத்திலேயே வெட்ட வெளிச்சமாக பாடல்கள் புரட்சித் தலைவர் பாடி இருக்கிறார்.

யாரைக் குறிப்பிடுகிறார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அது மக்களுக்கே தெரியும் மக்கள் நலம் மக்கள் நலம் என்று கூறி மக்களுக்கு கிள்ளி கொடுத்து தன் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தது என்று நான் குறிப்பிட்டேன் அதனை யாரும் மறுக்க முடியாது என்று உறுதியாக கூறுவேன் என்றார்.

வெற்றி பெற்ற தொகுதிகள் 108 பிறகு 234லும் தமிழக வெற்றி கழக தலைவரின் வசமாக தான் இருக்கும் என்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...