மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பு… போலீசார் அதிரடி நடவடிக்கை!

கோவை: துடியலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Advertisement

துடியலூர் அருகே பன்னிமடை சாலை, ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (20). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று சரத், தனது நண்பர்களுடன் பழனிக்கவுண்டர் புதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.

Also Read: கோவையில் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்; திருநங்கைகள் 4 பேர் கைது

Advertisement

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், திடீரென சரத் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சரத் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போனை பறித்துச் சென்றவர்கள் புதுப்பள்ளம் அஸ்வின் நகரைச் சேர்ந்த பட்டறை தொழிலாளி சுபாஷ் (21), சாய்பாபா காலனி பெரியார் நகரைச் சேர்ந்த காளான் கடை ஊழியர் சூர்யா (19) என்பது தெரியவந்தது.

Advertisement

Also Read: கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு- அதிகாரிகள் சஸ்பெண்ட்- அமைச்சர் நடவடிக்கை…

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய சந்துரு என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சுபாஷ் மற்றும் சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பாஜக திமுக இணைகிறதா?- வானதி சீனிவாசன் அளித்த பதில்…

கோவை: அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் தேசிய கைத்தறி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பா.ஜ.க தேசிய மகளிர் அணி...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.