கோவையில் அதிர்ச்சி… தந்தையை பீர் பாட்டிலால் தாக்கிய மகன் சிறையில் அடைப்பு!

கோவை: குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்த தந்தையை, பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்திய மகனை பெரிய கடைவீதி போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை பெரிய கடைவீதி, ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார் (52). இவரது மகன் மதன்ராஜ் (22). மதன்ராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது தந்தை சரவணகுமார் பலமுறை மகனை கண்டித்துள்ளார்.

Also Read: கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பீளமேடு மக்கள்

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மதன்ராஜ் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்த சரவணகுமார், குடிப்பழக்கத்தை கைவிடுமாறு மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த மதன்ராஜ், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், தனது கையில் இருந்த பீர் பாட்டிலால் சரவணகுமாரின் தலையில் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சரவணகுமாருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Also read: தமிழ்நாடு பட்ஜெட் சீக்ரெட்- அமைச்சர் செங்கோட்டையன்…

இதுகுறித்து சரவணகுமார் அளித்த புகாரின் பேரில், பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தந்தையை தாக்கிய மதன்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் கேங்மேன் பணியாளர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் மின்வாரிய கேங்மேன் பணியாளர்கள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களாக பணியாற்றி வருபவர்கள் முத்தரப்பு ஒப்பந்தப்படி கலர் உதவியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும் இந்த பணியாளர்களின் வேலைப்பளு...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...