பேத்திக்காக கோவை நீட் தேர்வு மைய வாயிலில் மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சி!

கோவை: பேத்திக்காக நீட் தேர்வு மைய வாயிலில் அமர்ந்து மூதாட்டி ஒருவர் ஸ்ரீராமஜெயம் எழுதி வருகிறார்.

Advertisement

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.

கோவையைப் பொறுத்தவரை 16 மையங்களில் இந்த தேர்வை 7,181 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்க உள்ள நிலையில் காலை முதலே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேர்வு மையத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லி மையத்திற்குள்ளே அனுப்பி வருகின்றனர்.

Advertisement

இதனிடையே சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி விமலா என்பவர் தனது பேத்தி ஜோஷனாவுக்காக நிர்மலா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மைய வாயிலில் அமர்ந்து ஸ்ரீராமஜெயம் எழுதி வருகிறார்.

இதுகுறித்து மூதாட்டி விமலா கூறுகையில், எனது பேத்தி இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதுகிறார். அவர் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இங்கு அமர்ந்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வருகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. கடந்த முறையும் பேத்திக்காக இதேபோல் அவர் தேர்வு மையத்திற்குள்ளே சென்றது முதல் வெளியே வரும் வரை ஸ்ரீ ராம ஜெயம் எழுதினேன் என்றார்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.