கோவையில் துவங்கியது நீட்…

கோவை: கோவையில் நீட் தேர்வு துவங்கியது.

Advertisement

கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை 7,181 பேர் எழுதுகின்றனர்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
இதற்காக ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்துள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் 16 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனை 7,181 பேர் எழுதுகிறார்கள்.

Advertisement

கோவையில் சூலூர் பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி, அவிநாசி சாலை சி. ஜ.டி கல்லூரி, பீளமேடு பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளி, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி, சிவில் ஏரோ பி.எஸ்.ஜி கல்லூரி, சுங்கம் நிர்மலா கல்லூரி, ஜி.என் மில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, அசோகபுரம் அரசு மாதிரி பள்ளி, ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, பாரதி பார்க் அவிநாசிலிங்கம் கல்லூரி, பீளமேடு பி.எஸ்.ஜி கல்லூரி, சித்தாபுதூர் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி, புலியகுளம் பி.எம் ஸ்ரீ கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 16 மையங்கள் இந்த நீட் தேர்வு நடைபெறுகிறது.

இந்த மையங்களில் அனைத்து வகுப்பறைகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கோவை மற்றும் சென்னையில் இருந்து வரும் தேர்வை கண்காணிக்கும் வகையில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தேர்வு 2 மணி தொடங்கி, மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் மதியம் 1:30 மணிவரை அனுமதிக்கப்பட்டனர்
தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் அணிகலன் அணிந்து வரக்கூடாது பேனா பென்சில் ஆகியவற்றை எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர்.

அணிகலன்கள் அணிந்து வந்த மாணவிகள் அனைவரும் அணிகலன்களை கழட்டிய பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு மையத்தை சுற்றி குறிப்பிட்ட இடைவெளிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் யாரும் நிற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.