நீட் மறுதேர்வு துவக்கம்- கோவையில் கூடுதல் பாதுகாப்பு…

கோவை: நீட் மறுதேர்வு நடைபெறும் கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மாதம் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு வருகிற 21 ஆம் தேதி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் இன்று மறுதேர்வு நடைபெறுகிறது.

Advertisement

கோவை மாவட்டத்தில் இதற்காக 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 7000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.15 மணி வரை நடக்கிறது. கோவையில் உள்ள தேர்வு மையங்களில் கடந்த முறையை காட்டிலும் சற்று கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டது.

ஒவ்வொரு மையத்திற்கும் தலா 10 காவலர்கள் வீதம் தேர்வு மையங்களுக்கு வெளியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் மேலும் தேர்வு எழுத வருபவர்களை தவிர்த்து வேறு 100மீ சுற்றளவுக்கு நிற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் என்னென்ன பொருட்களை கொண்டு வரலாம் என்னென்ன பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்று முறையாக அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட்டு அதனைத் தாண்டி வேறு பொருட்களை கொண்டு வரும் பட்சத்தில் அவை அனுமதிக்கப்படவில்லை.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த முக்கிய நபர் பிடிபட்டார்…

கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர் பிடிபட்டார். கோவை மாநகரில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூர் தேவராயம்புபுரம் பகுதியைச் சேர்ந்த...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...