கோவை AJK கல்லூரியல் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்…

கோவை: கோவை ஏ ஜே கே கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக கோவையில் பாலக்காடு சாலை வாளையார் அருகில் உள்ள ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளும் விசேஷ உடைகளை அணிந்து வந்து ஆடிபாடி மகிழ்ந்தனர்.

செண்டை மேளம், பேண்ட்வாத்தியங்கள், ராட்சத குரங்கு மற்றும் ரோபோட் மனிதர்கள் ஆகியவையும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றன. கல்லூரிக்கு முன்பு சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஆட்டம் பாட்டத்துடன் கல்லூரிக்கு வருகை புரிந்தனர்.

Advertisement

அதுமட்டுமின்றி ஓணம் பண்டிகையை முன்னிட்டு யானையை மையமாக கொண்டு பெரிய அளவில் அத்த பூக்கோலமும் போடப்பட்டிருந்தது. இதில் மகாபலி வேடமிட்ட மாணவர் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சொகுசு காரில் வலம் வந்தார்.

இறுதியாக சில மாணவர்கள் கார்களின் சைலன்சர்களை Modify செய்து ஒலி எழுப்பினர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...