கோவையில் மாறப்போகும் நொய்யல் ஆற்றங்கரை… ரூ.73 கோடியில் என்னென்ன வரப்போகிறது தெரியுமா?

கோவை: கோவையின் முக்கிய நீர்வழித்தடங்களில் ஒன்றான நொய்யல் ஆற்றுக்கு புதிய முகம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் 4.30 கி.மீ. தூரத்திற்கு ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்தி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்க ரூ.73.05 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவை குற்றாலத்தில் தொடங்கும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக 158.35 கி.மீ. தூரம் பயணித்து, நொய்யல் கிராமம் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.

கோவை மாவட்டத்தில் 67.71 கி.மீ. தூரம் பயணிக்கும் நொய்யல் ஆறு, மாநகராட்சி எல்லைக்குள் 18.56 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது. இதில் ஆத்துப்பாலம் சந்திப்பு முதல் நஞ்சுண்டாபுரம் சந்திப்பு வரை 4.30 கி.மீ. தூரத்திற்கு இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

திட்டத்தின் ஒரு பகுதியாக, நொய்யல் ஆற்றின் நுழைவுப் பகுதியில் வளைவு அமைப்பது, கரையோரத்தில் படிக்கட்டு வடிவ காபியன் சுவர் அமைப்பது, தடுப்புச் சுவர் மற்றும் கருங்கல் சுவர் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Advertisement

அதேபோல், ஆற்றங்கரையை பசுமையாக மாற்ற பல்வேறு வகையான மரங்கள் நடப்பட உள்ளன. தோட்டங்கள், கற்களால் அமைக்கப்பட்ட அமர்விடங்கள் மற்றும் ஓய்வு பகுதிகளும் உருவாக்கப்பட உள்ளன.

noyaal

பொதுமக்கள் ஆற்றங்கரையை பயன்படுத்தும் வகையில் நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதை அமைக்கப்பட உள்ளது. மிதிவண்டி நிலையங்களும் உருவாக்கப்பட உள்ளன. மேலும், ஆற்றின் அழகை ரசிக்கும் வகையில் பார்வை மேடையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

நொய்யல் ஆற்றில் குப்பைகள் தேங்குவதைத் தடுக்கும் வகையில் 4 இடங்களில் குப்பைத் தடுப்பு மிதவை அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

ஆற்றங்கரையில் சூரிய ஆற்றல் விளக்குகள், சூரிய ஆற்றல் மர விளக்குகள் மற்றும் பாதுகாப்புத் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, வேலி, சுழலும் கதவுகள், 2 இரும்புப் பாலங்கள் மற்றும் 2 சிறு பாலங்களும் அமைக்கப்பட உள்ளன.

ஆசாத் நகர், போத்தனூர் சாலை (இட்டேரி), வெள்ளலூர் சாலை மற்றும் ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பூங்காக்கள் மற்றும் திட்ட விளக்கத் தகவல் பலகைகள் அமைப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக, கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள நொய்யல் ஆற்றின் 18.56 கி.மீ. தூரமும் டிரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, ஆற்றின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதலுக்காக சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

noyyal river development

ரூ.73.05 கோடி திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், நொய்யல் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்படுவதுடன், நடைபயிற்சி, சைக்கிள் பயணம், பொழுதுபோக்கு மற்றும் பசுமை சூழலுக்கான புதிய இடமாகவும் இந்த பகுதி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...