ஓணம் பண்டிகை: கோவை வழியாக சிறப்பு ரயில்கள்

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க பெங்களூரு–திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Advertisement

பெங்களூரு கண்டோன்மென்ட் – திருவனந்தபுரம் வடக்கு செல்லும் சிறப்பு ரயில் (06579), ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை 4.40 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு, மறுநாள் காலை திருவனந்தபுரம் வடக்கை சென்றடைகிறது.

இந்த ரயில் கோவை மாவட்டத்தின் போத்தனூர் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி அதிகாலை 1.44 மணிக்கு வந்து, 1.45 மணிக்கு புறப்படும். அதேபோல் திருப்பூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.22 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கு – பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் (06580), ஆகஸ்ட் 29-ம் தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படுகிறது.

Advertisement

இந்த ரயில் போத்தனூரில் இரவு 8.59 மணிக்கு வந்து, 9 மணிக்கு புறப்படும். திருப்பூரில் இரவு 9.38 மணிக்கு வந்து 9.40 மணிக்கு புறப்படும்.

இந்த சிறப்பு ரயில்களில் ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர், பொது இரண்டாம் வகுப்பு மற்றும் லக்கேஜ்-கம்-பிரேக் பெட்டிகள் இடம்பெறும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ; கோவை மாநகராட்சி அறிக்கை!

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தீயணைப்பு பணியில் பல்வேறு வாகனங்கள் மற்றும் 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...