பீடம்பள்ளி மக்கள் ஆவேசம்; டாஸ்மாக் முன்பு தர்ணா!- VIDEO

கோவை: பீடம்பள்ளி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கடையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பீடம்பள்ளி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக மதுபானக் கடைக்கு வரும் சிலர், மது அருந்திவிட்டு சாலையோரங்களில் சுற்றித் திரிவதாகவும், இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், இரவு நேரங்களில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Advertisement

இதையடுத்து, குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கடையின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்களது கோரிக்கையை அதிகாரிகள் உடனடியாக பரிசீலித்து, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் அப்பகுதியிலேயே அமர்ந்திருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தண்ணீர்பந்தல் கொடிசியா சாலையில் போக்குவரத்து மாற்றம்- விவரங்கள் இதோ…

கோவை: கோவை தண்ணீர் பந்தல் கொடிசியா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோவை மாநகர் தண்ணீர்பந்தல் S-bend சந்திப்பு முதல் கொடிசியா சாலையிலுள்ள மின்சார அலுவலகம் வரையுள்ள சாலையில், வருகின்ற 19.08.2026 ஆம் தேதி...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...