கோவையில் தன்பாத் அம்ருத் ரயில் சேவை- பிரதமர் துவக்கி வைப்பு…

கோவை: கோவை போத்தனூர் தன்பாத் அம்ருத் பாரத் ரயில் சேவை துவங்கியது.

Advertisement

தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் – தன்பாத் இடையிலான அமிர்த பாரத் ரயில் சேவை காணொளி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி போத்தனூர் ரயில் நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. போத்தனூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பண்ணா லால், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாமோதரன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து புதிய ரயில் சேவையில் கோவையைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பலர் மகிழ்ச்சியோடு பயணித்தனர்.

Advertisement

இதுகுறித்து பேட்டியளித்த கோவையைச் சேர்ந்த தொழில்துறையினர், தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் கோயம்புத்தூரை பிற மாநிலங்களோடு இணைக்கும் வகையில் துவங்கப்பட்டுள்ள இந்த அம்ருத் பாரத் ரயில் சேவை தொழில்துறையை ஊக்குவிக்கும் எனவும், தொழில்துறையில் நிலவிவரும் தொழிலாளர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் இந்த ரயிலின் மூலம் கோவைக்கு வருவார்கள் எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த ரயில் சேவை சுற்றுலா போக்குவரத்தையும் மேம்படுத்தும் என தெரிவித்தனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...