கோவை: நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நீட் தேர்வு குளறுபடிகள் ஆகியவை காரணமாக அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது. சுமார் பத்து நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இருப்பினும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் திமுக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்களை சார்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வரிசையாக நின்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காந்திபுரம் சிக்னல் அருகில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வரை வரிசையாக நின்று இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக இருவருக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.




