கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு பணி நிரவல் முறையை கைவிட்டு அனைத்து எம்ஆர்பி செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் மற்றும் செவிலியர் போதகர் பணியிடங்கள் தொகுப்பூதிய முறையில் உருவாக்கிடாமல் நிரந்தர பணியிடங்களாக உருவாக்க வேண்டும்
நர்சிங் டூடர்ஸ் பதவி உயர்வில் ஏற்கனவே உள்ள நடைமுறையை செயல்படுத்திட வேண்டும், மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ளதைப் போலவே செவிலியர் அலுவலர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் மேலும் செவிலியர்களுக்கான முறையான பணி வரன்முறையை வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை இசை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் அவர்களது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கருப்பு பேட்ச் அணிந்து கோரிக்கை பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி கோரிக்கைகளையும் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.




