கோவை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் கல்லூரியில் முன்பதிவு செய்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.
12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவையில் பல்வேறு தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முன்பதிவு துவங்கி உள்ளது. மாணவ மாணவிகள் பலரும் ஆர்வமுடன் வந்து முன்பதிவு செய்தனர்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
அதனை தொடர்ந்து பல்வேறு தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முன்பதிவு துவங்கி உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்திலும் பல்வேறு கல்லூரிகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடனும் நண்பர்களுடனும் கல்லூரிகளுக்கு வருகை புரிந்து அவர்களுக்கு பிடித்த பாடத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
மேலும் மாணவ மாணவிகளுக்கு உதவி புரியும் வகையில் உதவி மையமும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு மதிப்பெண்ணிற்கு ஏற்ப எந்த பாடத்திட்டம் சரியாக இருக்கும் என்றும் எடுத்துரைக்கப்படுகிறது.


