சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்- பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

கோவை: சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், வாரப்பட்டி சுல்தான்பேட்டை ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் 15.07.2026 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

அதன் பொருட்டு 03.07.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு), வாரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற உள்ளார்.

பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) அவர்களிடம் மனுக்களாக எழுதி, வழங்கலாம். இதுதவிர வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு)சூலூர் வட்டாட்சியர் மற்றும் வாரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கொடுக்கலாம்.

Advertisement

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து, 15.07.2026 அன்று வாரப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் வழங்க உள்ளார்.

இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...